வட இந்தியா முழுவதும் வெயில் 46 டிகிரி வரை பதிவாகி வாட்டி வதைத்து வரும் நிலையில், வீடுகளில் ஏசி அல்லது கூலர் இல்லாத மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பதை நிரூபிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதில் ஒருவர், தனது சாதாரண மின்விசிறியின் மோட்டார் மற்றும் வலையைச் சுற்றி ஈரத்துணியைக் கட்டி, அதன் கீழே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தை வைத்துள்ளார்.
அந்தத் துணி தண்ணீரை உறிஞ்சி, மின்விசிறி ஓடும்போது அறைக்குள் ஏசி போல ஜிலுஜிலுவெனக் குளிர்ந்த காற்றை வீசுகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், “இனி கூலர் தேவையில்லை, எனக்கு 5,000ரூபாய் மிச்சம்” என்று ஜாலியாகப் பதிவிட, இந்தத் உள்நாட்டுத் தொழில்நுட்ப வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த விசித்திரமான யோசனைக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுபக்கம் இதில் இருக்கும் பயங்கரமான உயிர் ஆபத்தை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி எச்சரித்து வருகின்றனர்.
<a href=”http://
“कूलर” की ज़रूरत ही खत्म😂🤣
मेरे 5000 रुपए बच गए, अब जा रहा हूं यही जुगाड़ बनाने। pic.twitter.com/FPJ6KTI8Mm
— Nitin Prajapati (@Prajapat204) May 20, 2026
“>
தண்ணீரும் மின்சாரமும் எப்போதுமே ஆபத்தான கூட்டணி என்பதால், மின்விசிறியில் இருந்து சொட்டும் நீர்த்துளிகள் மோட்டாரிலோ அல்லது ஒயரிலோ பட்டால் மின்சுற்றுக்கோளாறு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
“தம்பி, அவனுக்கு கரண்ட் ஷாக் அடிச்சிடப் போகுது” என்றும், “இப்படி விபரீதம் நடந்தால் மிச்சம் பிடித்த 5,000 ரூபாய் சிகிச்சைக்குக் கூட பத்தாது” என்றும் கமெண்ட் அடித்து, முறையான வழிகாட்டுதல் இன்றி இதுபோன்ற ஆபத்தான சோதனைகளை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.
