உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்   கைர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜராரா கிராமத்தில், 19 வயதான ஷிவானி என்ற இளம்பெண் தனது தந்தையின் கைகளால் உயிரிழந்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, தந்தை உடலை யாரும் பார்க்காதவாறு காட்டுப் பகுதியில் புதைத்துவிட்டு, தப்பிச் செல்ல முயன்றார்.

இருப்பினும், இந்த கொடூரச் செயலை நேரில் பார்த்த நபர் ஒருவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தோண்டிப் புதைக்கப்பட்டிருந்த ஷிவானியின் உடலை மீட்டனர்.

இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்ட தந்தையை கைது செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்று வளர்த்த தந்தையே மகளைக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.