உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவத் துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த மாணவி ஒருவரை, சிகிச்சை என்ற பெயரில் அந்த கொடூர மருத்துவர் மயக்க ஊசி போட்டு மயக்கமடையச் செய்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த மருத்துவர் மாணவியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயல் பெரும் அதிர்வலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை, குற்றவாளியான மருத்துவர் விஜய் கிரியை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவத்துறையில் இத்தகைய செயல்கள் சமூக பாதுகாப்பின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
