வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கை ஆற்றில், இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தசாஸ்வமேத் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஷஷாங்க் திரிபாதி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

மேலும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், அமைதியைச் சீர்குலைத்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த இளைஞரை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ள நிலையில், புனிதமான ஆற்றுப் பகுதிகளில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.