மதுரை மாநகர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அந்த தகவலின்படி உடனடியாக அதிகாரிகள் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய அம்மா 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம் அவருடைய வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு மாணவியின் தந்தையை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.