முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி 9 வருடங்களுக்கு முன்னதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முக அழகிரி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சென்ற 2014 ஆம் வருடம் மார்ச் மாதம் நிரந்தரமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தை நினைவுக் கூர்ந்து அழகிரி தற்போது தன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம். ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாதென டுவிட்டரில்  தெரிவித்து உள்ளார். சமீபத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலினை, முக அழகிரி நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தி.மு.க-வில் மீண்டும் இணைவது தொடர்பாக கட்சி நிர்வாகம் தான் முடிவுசெய்யும் என அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.