தகிக்கும் வெயிலின் கொடுமை தாளாமல் மனிதர்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில், வாயில்லா ஜீவன் ஒன்றைக் குடும்பத்தினர் கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டுச் சென்ற நெஞ்சை ரணமாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிழல் கூட இல்லாத திறந்த வெளியில், தாகத்தால் தவிக்கும் அந்த உயிரினம் படும் அவதியைக் காணும்போது எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சக்காரர்களுக்கும் இரத்தம் கொதிக்கும்.

மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய குடும்பமே இப்படி ஒரு கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பது மனிதநேயம் இன்னும் எவ்வளவு கீழிறங்கிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட பயனர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Save A Stray (@saveastray.noida)

“>

இதனால் “இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்றும், “விலங்குகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இணையவாசிகள் பலரும் இந்தக் குடும்பத்தினரைக் கடுமையாக விமர்சித்து வருவதுடன், வாயில்லா ஜீவன்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.