இந்தியாவில் சமீப காலமாகவே விமான நிலையம் மற்றும் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதன்படி கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் வந்திரங்கிய பிறகு அவர்களின் லக்கேஜ் வருவதற்கு 40 நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது. அதனால் பயணிகள் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த நிலையில் பயணிகளில் ஒருவராக இருந்த டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ் வாசித்து பயணிகளை உற்சாகப்படுத்தினார்.

மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த பம்பாய் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த அந்த அரபிக் கடலோரம் என்ற பாடலில் இடம்பெறும் ஹம்மா ஹம்ம ஹம்மா என்ற பாடலை அவர் வாசித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.