கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், “அந்த நேரத்தில் எங்களை காவல்துறையினர் கிளம்பச் சொல்லியிருந்தனர்” என TVK தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “இந்த தகவலை அவர்கள் இதற்கு முன்பே கூறியிருக்க வேண்டும். திரு விஜய் அவர்களைத் தவிர தமிழக வெற்றிக்கழகத்தின் எந்த நிர்வாகியும் கரூரை விட்டு நகரவில்லை.தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில், அனைவரும் சம்பவ இடத்திற்கே விரைந்தனர்” என கூறியுள்ளார்.

மேலும், “அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் கரூர் எல்லையில் தடுத்து நிறுத்தியதாகவும், TVK நிர்வாகிகளை ‘உள்ளே செல்ல வேண்டாம்’ என கூறப்பட்டதாகவும்” சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது லயோலா மணி எங்கே? ராஜ்மோகன் எங்கே? என்கிற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது தமிழக வெற்றிக்கழகத்தாரே,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“>

 

“அன்றே விஜய் அவர்கள் தாமாகவே வீடியோவில் இதை தெளிவுபடுத்தியிருந்தால், இன்று ‘தலைமறைவு வெற்றிக்கழகம்’ என்ற பெயர் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது,” எனவும் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் பேசுபொருளாகி பரவிவருகிறது.