கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இது குறித்த தகவலை ட்ரைப்ஸ் என்ற யூடியூப் சேனல் தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளர் கரிகாலன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், “ மனு தாக்கல் செய்யப்பட்டதென சொல்லப்படுகிறதிலும், அதில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டதிலும் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை; மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளார் அதிமுக ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன்,” என செல்வராஜ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Big Breaking:
Full Video: https://t.co/TXp44FCSPt
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் பெயரில் CBI விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு பற்றியே தனக்கு தெரியாது என்றும்,மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி… pic.twitter.com/jFM24vFZ5F
— கரிகாலன் (@KariKalankiru) October 11, 2025
“>
இதை ஊடகவியலாளர் அரவிந்த் (@Aravind_Journo) நேரடியாக களத்திலிருந்து பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்ட நிலையில் இணையத்தில் தற்போது இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
