கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் முன்பு திருமாவளவன் காரை ஸ்கூட்டர் வழிமறைத்த சம்பவம் தற்செயலானது அல்ல, திட்டமிட்ட சதியாகும் எனவும், அதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் பின்னணியில் உள்ளனர் எனவும் திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் கூறியதாவது, “நீதிமன்றம் அருகே நடந்த இந்த சம்பவம் சீரற்ற விபத்து அல்ல, அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்” என வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

“>

 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “சாலையில் சென்ற ஒருவரை இடித்துவிட்டு, குண்டர்களை வைத்து தாக்கியதற்கு பதிலாக பாஜக சதி, ஆர்எஸ்எஸ் சதி என்று கூறுவதற்கு கூச்சமில்லையா? வழக்கறிஞர் பார் கவுன்சிலுக்குள் சென்று தாக்கிய சம்பவத்துக்கு இதுவரை வழக்கு பதிவு செய்யாத தமிழக காவல்துறை வேடிக்கை பார்க்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.