சென்னை: தமிழக திரையுலகில் இருந்து மக்கள் தலைவராக உயர்ந்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கோலிவுட்டில் தற்போது அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அஜித்குமாருக்கு விடுத்துள்ள ஒரு ஓப்பனான வேண்டுகோள் சோசியல் மீடியாவில் பயங்கரமாகத் தீயாய் பரவி வருகிறது!
அஜித்குமாரை நோக்கி அனல் பறக்கும் வகையில் பேசியுள்ள மன்சூர் அலிகான், தற்போதைய அரசியல் மற்றும் சினிமா சூழலை வச்சு அஜித்துக்கு ஒரு மாஸான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
”விஜய் முதலமைச்சர் ஆயிட்டாரு… நீங்க இன்னும் ரேஸ்னு சுத்துறீங்க!”
மன்சூர் அலிகான் தனது பதிவில், “விஜய் அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால் நீங்களோ ரேஸ் ரேஸ் என்று மிகவும் ரிஸ்க்கான, உயிரையே பணயம் வைக்கக்கூடிய கார் ரேஸ் தான் என் பேஷன் (Passion) என்று இன்னும் அதிலேயே பிசியாக உள்ளீர்கள்,” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்!
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக நடிக்க வாங்க!
மேலும் அஜித்துக்கு இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுத்த அவர், “தயவு செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் இந்தத் திரைத்துறையைக் கருத்தில் கொண்டு, உங்களது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த உடனே சினிமாவுக்கு வாங்க. 10 தயாரிப்பாளர்களை ஒண்ணா சேர்ந்து படம் தயாரிக்க வச்சு, ஒரு உன்னத லட்சியத்திற்காக நடிக்க வாங்க என்று இரு கரம் கூப்பி, இரு கரம் நீட்டி உங்களை வரவேற்கிறேன்,” என்று மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார்!
முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த மாஸ் வெற்றிக்குக் பிறகு, கோலிவுட்டின் மற்றுமொரு டாப் ஹீரோவான அஜித்குமாரை மன்சூர் அலிகான் இப்படி ஓப்பனாகக் கூப்பிட்டிருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி நகர்வால் கோலிவுட் வட்டாரம் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது!
