திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லால், தன்னிடம் உள்ள யானை தந்தங்கள் மற்றும் கலைப் பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க அதிரடியாக விண்ணப்பித்துள்ள சம்பவம், தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

​கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, அவரிடமிருந்து சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பெரிய சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

​”என்கிட்ட 10 யானை தந்தம் இருக்கு!”

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, நடிகர் மோகன்லால் தற்பொழுது வனத்துறையிடம் ஒரு முக்கியமான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். அதில், “தன்னிடம் மொத்தம் 10 யானை தந்தங்கள் மற்றும் யானை தந்தங்களால் செய்யப்பட்ட 13 சிலைகள் (கலைப் பொருட்கள்) கைவசம் உள்ளன,” என்று அக்குவேறு ஆணிவேறா கணக்குக் காட்டியுள்ளார்!

​வனத்துறையிடம் ஒப்படைக்க அதிரடி முடிவு!

மேலும் தனது விண்ணப்பத்தில், தன்னிடம் இருக்கும் இந்த யானை தந்தங்கள் மற்றும் கலைப் பொருட்கள் அனைத்தையும் வனத்துறையிடமே முறைப்படி ஒப்படைக்க விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மிகவும் ஓப்பனாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

​நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்கில் சிக்கியிருந்த இந்த யானை தந்த விவகாரத்தில், மோகன்லால் அவராகவே முன்வந்து அவற்றை ஒப்படைக்க விண்ணப்பித்திருப்பது ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த அதிரடி மூவ் காரணமாக, வனத்துறை அதிகாரிகள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது!