சென்னை: தமிழக திரையுலகில் இருந்து மக்கள் தலைவராக உயர்ந்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் பிரம்மாண்ட வெற்றி, தற்போது கோலிவுட்டின் ஒட்டுமொத்த டாப் நடிகர்களையும் பயங்கர உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது போல் தெரிகிறது. இதன் காரணமாக, கோலிவுட் ஹீரோக்களின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகின்றன!
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, கோலிவுட்டின் மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் தற்போது அரசியல் பாதையை நோக்கித் தங்களது அடுத்தகட்ட காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.
”சூர்யா அரசியலுக்கு வரணும்!”
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், அவர் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும் என சோசியல் மீடியாவிலும், பொதுவெளியிலும் தங்களது குரல்களை பலமாக எழுப்பத் தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் விஜய் சாதித்துக் காட்டியது போல சூர்யாவும் களமிறங்க வேண்டும் என்பது அவர்களின் பலத்த கோரிக்கையாக மாறியுள்ளது.
தனுஷ் மன்றத்தின் புதிய கொடி & விஷால் பேச்சு!
மற்றொரு புறம், நடிகர் தனுஷின் ரசிகர்கள் ஒருபடி மேலே போய், தங்களது நற்பணி மன்றத்திற்கான புதிய கொடியை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், சமீபத்தில் தனது ரசிகர்களிடம் பேசிய நடிகர் விஷால், “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் தீவிரமாக நினைக்கிறேன்” என்று ஓப்பனாகப் பேசியிருப்பது ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!
முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த மாஸ் சக்சஸ், கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான விதையைப் போட்டுள்ளது போல் தெரிகிறது. டாப் ஹீரோக்களின் இந்த அடுத்தடுத்த அதிரடி மூவ்களால், தமிழகத் திரையுலகமும், அரசியல் களமும் இப்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது!
