தமிழக அரசியலில் ஆட்சியமைப்பதற்கான பலப்பரீட்சை உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  இரண்டாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து அதிரடிப் புகாரை அளித்துள்ளார்.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தரப்பு எப்படியாவது குதிரை பேரம் பண்ணி மெஜாரிட்டியைப் பிடிக்கலாம்னு தப்பு கணக்கு போட்டுட்டாங்க; ஆனா எங்க எம்.எல்.ஏ. காமராஜ் அவங்க பிடியிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பிச்சு எங்ககிட்ட வந்துட்டாரு” என அதிரடியாகப் பொரிந்து தள்ளியுள்ளார்.

“எங்கள் எம்.எல்.ஏ-வின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ஆளுநரை ஏமாற்றப் பார்த்த மோசடி அம்பலமாகிவிட்டது” என்று சீறிய தினகரன், திராவிட அரசியலைச் சிதைக்க நினைக்கும் புதிய சக்திகளுக்கு மன்னார்குடி மண் ஒருபோதும் அடிபணியாது எனச் சூளுரைத்துள்ளார்.

“>

 

ஆளுநரின் இரண்டாம் கட்ட சந்திப்புக்குப் பிறகு தினகரன் கொடுத்துள்ள இந்தப் பேட்டி, பனையூர் வட்டாரத்தை நிலைகுலைய வைத்ததோடு, கோட்டை அரியணைப் போட்டியில் விஜய்யின் 118 மேஜிக் நம்பரை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.