தமிழக அரசியலில் ஆட்சியமைப்பதற்கான பலப்பரீட்சை உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கும் நிலையில், மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் அளித்துள்ள அதிரடிப் பேட்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.

தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்டிவிட்டதாகக் கூறி ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவுக் கடிதத்தில், “இருப்பது எனது கையெழுத்தே அல்ல” என காமராஜ் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தவெக தரப்பில் தான் கையெழுத்திடுவது போன்ற வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே, “அது என்னுடைய கையெழுத்து இல்லை  காமராஜ் பேசியிருப்பது பனையூர் வட்டாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

“நான் இப்போதும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வில்தான் இருக்கிறேன்; எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதையே விரும்புகிறேன்” என அவர் போட்டுள்ள அந்த ஒரு போடு, விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இந்த ‘கையெழுத்து யுத்தத்தால்’ தமிழக அரசியல் களம் இப்போது ஆளுநர் மாளிகையிலிருந்து நீதிமன்றம் வரை நகரும் சூழல் உருவாகியுள்ளது.

“>