தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்காக வில்லிவாக்கம் பகுதிக்கு வரவுள்ள நிலையில், சென்னை காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பிரச்சார இடத்தில் 300 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றும், மக்கள் கூடுவதற்கும் கலைந்து செல்வதற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மொத்தம் 21 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விஜய்யின் வருகையால் லட்சக்கணக்கில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மிகக்குறைந்த எண்ணிக்கையிலான அனுமதி தவெக நிர்வாகிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
