உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில், ஒரு சிறிய கவனக்குறைவு மிகப்பெரிய உயிர்ப்பலியில் முடிந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில், பேரன் தனது காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். ஆனால், அவசரத்தில் காரின் ஹேண்ட் பிரேக் (Handbrake) போட மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சாய்வான பாதையில் நின்றிருந்த கார், மெல்ல பின்னோக்கி உருளத் தொடங்கியுள்ளது.
அப்போது வாசலில் நின்றிருந்த அவரது பாட்டி, கார் பின்னோக்கி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், வேகமெடுத்த கார் அந்த முதியவரைச் சுவருக்கும் காருக்கும் இடையில் வைத்து நசுக்கியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Heartbreaking loss for the family.
An elderly woman died after her grandson forgot the handbrake. The car rolled back and crushed her. 💔 pic.twitter.com/h7UKJn0pm1
— Godman Chikna (@Madan_Chikna) April 5, 2026
இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிட மறதி ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே பறித்துள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
