புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘உழவர்கரை’ தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. முன்னதாக தொகுதிப் பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால், விசிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தது. ஆனால், தற்போது ஒரு அதிரடித் திருப்பமாக, உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக சின்னத்திற்கு வாக்களிக்குமாறும், மற்ற 3 தொகுதிகளில் (ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனம்) விசிக சின்னத்திற்கு வாக்களிக்காமல் கூட்டணி கட்சிகளுக்கே வாக்களிக்குமாறும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

​ஏற்கனவே காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தது, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தது என அடுத்தடுத்து திருமாவளவன் எடுத்து வரும் முடிவுகள் கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக விசிக தொண்டர்களே புலம்பி வருகின்றனர். கூட்டணியைக் காப்பாற்றத் தனது சொந்தக் கட்சி வேட்பாளர்களையே கைவிடும் திருமாவின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.