தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது தற்போது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக-வை தங்கள் கூட்டணியில் இணைக்கப் பல கட்சிகள் காய் நகர்த்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். “நம்மை கூட்டணியில் சேர்க்கப் பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், நம்மைப் பொறுத்தவரை நமக்குத் தன்மானம் மிக முக்கியம். விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களோடு மட்டும்தான் கூட்டணி!” என அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
"நம்மை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறார்கள்; விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்கள் கூடதான் கூட்டணி" – கோபிசெட்டிபாளையத்தில் தவெகவின் செங்கோட்டையன் பேச்சு#Sengottaiyan | #Vijay | #TVK | #TVKVijay | #Election2026 pic.twitter.com/70Gy3B6PnA
— PttvOnlinenews (@PttvNewsX) March 15, 2026
இதுவரை கூட்டணி குறித்துத் தலைமை மௌனம் காத்து வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்தத் துணிச்சலான பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை நோக்கித் தளபதி விஜய் களம் கண்டு வரும் வேளையில், “விஜய் தான் முதல்வர்” என்பதில் கட்சி உறுதியாக இருப்பதை இந்தப் பேச்சு உறுதிப்படுத்துகிறது. மற்ற கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ‘விஜய் ரசிகர்கள்’ மத்தியில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது.
