நடிகர் விஜயை ‘விஜய்’ என்று ஒருமையில் அழைத்தது பெரிய குற்றமா? என்ற கேள்வியோடு சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “விஜயை மரியாதை குறைவாகப் பேசிவிட்டதாகச் சொல்லி, ஒரு சிலர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். நான் என்ன அப்படித் தவறாகப் பேசிவிட்டேன் என்று கேட்டால், விஜயை ‘விஜய்’ என்று பெயர் சொல்லி அழைத்துவிட்டேனாம்” என கிண்டலாகத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதையே மிகப்பெரிய குற்றமாகச் சித்தரிக்கும் ரசிகர்களின் போக்கைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், “விஜய் என்ற பெயரையே ஒரு கெட்ட வார்த்தை ரேஞ்சுக்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார்களே? இனி யாரையாவது திட்ட வேண்டுமென்றால் அந்தப் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டுமா?” என சாட்டை துரைமுருகன் எழுப்பியுள்ள நையாண்டி கலந்த கேள்வி, விஜய் ரசிகர்களைக் கடும் கொதிப்படையச் செய்துள்ளது. ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள விஜயை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகக் காட்ட முயற்சிக்கும் ரசிகர்களின் செயல், ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் அவர் சாடியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.