விஜய் டிவியில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவற்றையெல்லாம் விட அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஏழாவது சீசன் தொடங்க மக்கள் ஆதரவே காரணமாக உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 சீசன் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காற்றுக்கென்ன வேலை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் விரைவில் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பாண்டியன் ஸ்டோர் இரண்டாவது பாகமாக மீண்டும் வேறு நேரத்தில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.