தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி, கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நக்மாவுக்கு 48 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நக்மா சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்த எண்ணத்தை பகிர்ந்துள்ளார். அதாவது எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், நான் எப்போதும் திருமணம் குறித்து எண்ணிக் கொண்டே இருப்பேன், அதற்கான நேரம் கூடி வந்தால் விரைவில் எனக்கு திருமணம் நடைபெறும், அப்படி நடந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.