நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தினார்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விஜய் முதலமைச்சர் ஆக முடியாத சூழல் உருவானதால், இசக்கியப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். தலைவர் ஜெயிக்கவில்லைஎன்ற விரக்தியில் இருந்த இசக்கியப்பன், நேற்று திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

இதில் உடல் கருகி படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தற்கொலை முயற்சி சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.