தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள தவெக அரசு, முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (Special Officer) ஒருவரை நியமித்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்றவுடனேயே இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது நல்லதல்ல என்றும், தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க இந்த நியமனத்தை முதல்வர் விஜய் மீண்டும் ஒருமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜோதிமணி ஓப்பனாகவே பதிவிட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு ஒரு பக்கம் இருக்க, தற்போது கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடமிருந்து எழுந்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.