அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளனர் அவரது கட்சி எம்எல்ஏக்கள்.

கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டிக்காத்த அதிமுக, தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைந்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த கலகத்திற்கும் மாஸ்டர்மைண்டாகச் செயல்பட்டது லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் என்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.

லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியும், தமிழகத்தின் டாப் கோடீஸ்வர வேட்பாளருமான இவர், தனது மருமகன் ஆதவ் அர்ஜுனா மூலமாக விஜய் தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக அதிருப்தி குழுவையும் தவெக அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டுள்ளார்.

ஏற்கனவே முதல்வர் விஜய்யைச் சந்தித்தபோது கைகளைப் பிடித்து பாசத்துடன் கண்களில் ஒற்றிக்கொண்ட லீமா ரோஸ், “அதிமுக – தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது” என முன்பே எச்சரிக்கை மணி அடித்தார்.

தற்போது டெல்லி லாபி மற்றும் கார்ப்பரேட் சக்திகளின் ஆலோசனையோடு, எடப்பாடியின் கோட்டையைச் சரித்து, தவெக அரசுக்கான ஆதரவைத் திரட்டியதில் லீமா ரோஸின் பங்கு மிக முக்கியமானது என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன.