தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ 2 குறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார். நேற்று லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்கள் அனைவரும் லியோ 2 எப்போது வரும் என கேட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது லோகேஷ், விஜய் அண்ணா கண்ணு காட்டட்டும் லியோ 2 அறிவிப்பை வெளியிட்டு விடலாம் என மாஸாக தெரிவித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அதன் பிறகு இது லியோவின் முதல் மேடை அதுவும் வெற்றி மேடை என நெகிழ்ச்சியுடன் லோகேஷ் கூறினார்.