அஜர் பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் சமீபத்தில் படக்குழுவினரை அழைத்து பேசியுள்ளார். அப்போது அனைவரும் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும் முழு உடல் பரிசோதனை செய்யவும் கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் மாரடைப்பால் உயிரிழந்த கலை இயக்குனர் மிலன் மரணம் தன்னை மிகவும் வேதனை அடைய செய்தது என்றும் நடிகர் அஜித் உருக்கமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பட குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.