கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒரு மறக்க முடியாத படமாகவே இருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் நடித்துள்ள நிலையில்  வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இந்த படத்தில் என் பெயர் படையப்பா என்ற பாடலில் குழந்தை ஒன்று வருவதை நான் பார்த்திருப்போம். பாசமுள்ள குழந்தை அப்பா என்ற பாடல் வரியின் போது ஒரு சிறிய குழந்தை முகம் படத்தின் இடம் பெற்று அதன் பிறகு ரஜினி முகம் வரும்.

அந்த குழந்தை யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . தற்பொழுது அந்த குழந்தை மிகப்பெரிய சீரியல் நடிகையாக வலம் வருகிறார். இந்த குழந்தை பிரபல சீரியல் இலக்கியாவின் கதாநாயகியாக வரும் ஹேமா பிந்து என்பவர் தான். இதை பார்த்து ரசிகர்கள் அந்த சின்ன குழந்தை இந்த நடிகயா? என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.