லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா  நேற்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் 1 மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

பொதுவாக நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். ஆனால் லியோ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லாமல் வெற்றி விழா நடைபெறும் நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இந்த வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடுகாத்திருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை 5 கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி பார்க்க வரும் கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சி பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக பாஸ் எடுத்துட்டு வர வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தலானது கொடுக்கப்பட்டு இருந்தது. அதே போல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை, இதோடு நிகழ்ச்சிக்கான பாஸ் என மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு தான் நிகழ்ச்சி நடந்தது.

நடிகர் விஜய் பேச  மேடை ஏறும் போதும் ரசிகர்கள் ஆரவாரம் செலுத்தி வரவேற்றார்கள். நான் ரெடி தான் வரவா என்கின்ற சாங்குடன் தான் தனது உரையை தொடங்கினார். அந்த சாங்ல நிறைய இடத்துல பீப் போட்டு, டவ் டவ் என இடங்கள் எல்லா வரிகளையும் அப்படியே பாடி  ரசிகர்களை விஜய் உற்சாகப்படுத்தினார்.

அப்போது பேசிய நாடிர் விஜய் படத்தின் பாடல்களை சென்சார் கட் செய்தார்கள். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் ? விரல் இடத்தில் தீப்பந்தம் என்று ஒரு வரி வரும். அதை ஏன் சிகரெட் என்று நினைக்கிறீர்கள் ? அந்த தீப்பந்தம் ஏன் பேனாவாக இருக்கக்கூடாது என்பது போல் கூறி நான் மதிப்பு  செல்ல முடியும்.  ஆனால் ? அவ்வாறு நான் செல்ல விரும்பவில்லை. அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட வரிகள் சிகரெட்டை தான் குறிப்பிட்டன.

நீங்கள் படத்தை படமாக பாருங்கள். சினிமாவில் சில காட்சிகள் வைக்கப்படுவது நல்லதும்,  கெட்டதும் இருக்கிறது என்பதை வேறுபடுத்தி காட்டத்தான். நான் படத்தில் அப்படி நடிப்பதன் காரணமாக யாரும் தவறாக வழிநடத்த பட மாட்டார்கள். அதற்கு நான் உங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை. எனக்கு நிச்சயமாக தெரியும்.  நீங்கள் கண்டிப்பாக அதை பின்பற்ற மாட்டீர்கள்.

அப்படிப் பார்த்தால் பள்ளி,  கல்லூரி செல்லும் வழியில் கூட தான் மதுபான கடைகள் உள்ளன.  பள்ளிக்கு இதே சாலையில் தான் செல்கிறோம். அதை பார்த்துக் கொண்டுதான் செல்கிறோம். இவர்கள்  அனைவரும் மதுவுக்கு அடிமை ஆகிறார்களா என்ன ? நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.