தளபதி விஜய்யின் முன்னாள் மேலாளரும், அவரது நெருங்கிய வட்டாரத்தில் பல ஆண்டுகள் இருந்தவருமான பி.டி.செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது நடிகை திரிஷாவிடம் கேட்டால்தான் தெரியும்” என்று கூறி அதிர வைத்துள்ளார். ஒரு காலத்தில் விஜய்யின் நிழலாக இருந்தவரே இப்படித் திரிஷாவின் பெயரை இழுத்துச் சர்ச்சையைக் கிளப்பியது தவெக மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழக வெற்றி்க் கழகத்தில் (TVK) புதிதாக வந்தவர்களால், ஆரம்பத்தில் இருந்து விஜய்க்காக உண்மையாக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ள நிலையில், அவருடன் நீண்ட காலம் பயணித்த ஒருவரே இப்படிப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
