வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். “இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல; விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், உயிரும் உடலும் போன்றவர்கள்” என்று மிக உருக்கமாகக் கூறினார். ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்கவே முடியாத ஒரு ஆழமான பந்தம் இது என்று அவர் விளக்கியபோது, அரங்கமே ஆர்ப்பரித்தது.

​இந்த உறவு என்பது மிகவும் சென்சிடிவான ஒரு சென்டிமென்ட் என்று குறிப்பிட்ட விஜய், பேசிக்கொண்டிருக்கும் போதே வார்த்தைகள் தடையாகி ஒரு கட்டத்தில் கண்கலங்கினார். திரையில் மாஸாகப் பார்த்துப் பழகிய தங்களது தலைவன், மக்கள் மீது தான் வைத்திருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் போது இப்படி மேடையிலேயே கண் கலங்கியதைக் கண்டு அங்கிருந்த நிர்வாகிகள் நிலைகுலைந்து போயினர்.