புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இப்போது தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அக்கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் தற்போது ‘வாளி’ (Bucket) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி மற்றும் அதிருப்தி காரணமாக, திருமாவளவன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

​அதன்படி, புதுச்சேரியின் முக்கியத் தொகுதிகளான நெட்டப்பாக்கம், ஊசுடு மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் ‘வாளி’ சின்னத்தில் களம் காண்கின்றனர். கூட்டணி பலமின்றித் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க விசிக திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் தனிச் சின்னம் கோரி வரும் நிலையில், புதுச்சேரியில் கிடைத்துள்ள இந்த ‘வாளி’ சின்னம் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் விசிக-வின் வருகை தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.