உலகெங்கும் நிலவும் போர்க்கால சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ‘கோலு’ என்ற மெக்கானிக் செய்த காரியம் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
பெட்ரோல் பங்குகளில் நிலவும் நீண்ட வரிசையைத் தவிர்க்க கோலு ஒரு பலே ஐடியாவைப் பண்ணியுள்ளார். தனது பல்சர் பைக்கில் ஏற்கனவே இருக்கும் பெட்ரோல் டேங்க் போக, கையில் தனியாக இன்னொரு டேங்கையும் எடுத்துக்கொண்டு பங்கிற்குச் சென்றுள்ளார்.
முதல் டேங்கில் பெட்ரோல் நிரப்பியதும், அதை அப்படியே கழற்றி கீழே வைத்துவிட்டு, கையில் கொண்டு வந்த அடுத்த டேங்கை பைக்கில் மாட்டி அதிலும் பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
गोरखपुर के पेट्रोल पंप पर एक शख्स पहुंचा. पल्सर लेकर पहुंचे शख्स का ये नायाब तरीका सोशल मीडिया पर वायरल हो रहा है. शख्स एक बाइक के साथ दो टंकी लेकर आया. एक टंकी में पेट्रोल लेने के बाद तुरंत दूसरी टंकी लगाकर उसे भी भर लिया. देखें वीडियो…#gorakhpur #petrolpump #viral #trending… pic.twitter.com/CFCDdkwweh
— ABP News (@ABPNews) March 26, 2026
ஒரே நேரத்தில் டபுள் பெட்ரோல் நிரப்பிவிட்டு கூலாக கிளம்பிய கோலுவின் இந்த ‘ஜுகாட்’ வித்தையைப் பார்த்து, வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் கடுப்பாகிப் போயினர்.
“நாங்க மெக்கானிக் சார்.. எங்களுக்கு வேலை தான் முக்கியம், ஒவ்வொரு முறையும் இப்படி வரிசையில் நிற்க நேரமில்லை” என அவர் அசால்ட்டாகக் கூறியிருப்பது தான் ஹைலைட்!
