சோஷியல் மீடியாவில் தற்போது ஒரு மனதை உருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு சிறுமியை வரவேற்க, ஏற்கனவே காத்திருந்த நாய்கள் கூட்டம் அவளை நோக்கி ஓடி வந்து, சுற்றி கொண்டு Z+ பாதுகாப்பு வட்டம் போன்று அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. சிறுமி பள்ளி பையை சுமந்து வீட்டிற்குச் செல்ல, நாய்கள் அவளைச் சுற்றி ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றன.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @jitendra_salimpur_2251 என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 7.5 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “இணையத்தில் இதுவரை பார்த்த அழகான வீடியோ இது”, “இந்தக் குழந்தை உண்மையில் பாதுகாப்பான கைகளில் இருக்கிறாள்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும், சிலர், “இது நம்மை கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அழகான காட்சி”, “நாய்களின் உண்மையான அன்பிலிருந்து மனிதர்கள் கூட பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். சிறுமிக்கும் நாய்களுக்கும் இடையிலான இந்த அற்புத பாச பந்தம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.
