அரியானா மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 28) முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “தீன் தயாள் லடோ லட்சுமி திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில் பயனாளர்களின் வரம்பு விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். பெண்களுக்கான இந்த திட்டம் மாநில அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.