பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜகவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

“>

 

அந்த நேரத்தில், இரு கட்சியினரும் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அலுவலக வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை பாஜகவினர் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. திடீர் மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

“>