மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “பாஜக நாடு முழுவதும் வங்காளிகளின் மீது மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்குவதற்காக, 500க்கும் மேற்பட்ட குழுக்களை மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பிற்கு அனுப்பியுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், “உங்கள் வீட்டிற்கு யாராவது கணக்கெடுப்புக்காக வந்தால் விவரங்களை வழங்க வேண்டாம். அவர்கள் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, நீங்கள் நேரடியாக வாக்குச்சாவடிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க முடியாது” என்று வலியுறுத்தினார்.
