சமூக வலைதளங்களில் பரவியுள்ள ஒரு வீடியோ, நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் தன்னுடைய கையில் இருந்த சிறு குழந்தையை, மேல் மாடியில் இருந்து கீழே எறிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
கீழே நின்றிருந்த ஒருவர் குழந்தையை கையில் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், குழந்தையின் உயிருக்கு பெரிய ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை, ஆனால், அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Antil Yadav (@rjkhurki)
“>
வீடியோவில், முதலில் சில பெண்கள் மாடியில் நிற்கும் காட்சிகள் தெரிகின்றன. சில நொடிகளில், ஒரு பெண், தனது கையில் இருந்த குழந்தையை மாடி நுனியில் இருந்து கீழே எறிகிறார். அதிர்ஷ்டவசமாக, கீழே நின்றிருந்த ஒருவர் உடனே குழந்தையை கையில் பிடித்ததால் உயிர்பயம் தவிர்க்கப்பட்டது. ஆனால், வீடியோவை பார்த்தவர்கள், “சிறிய தவறும் நிகழ்ந்திருந்தால் குழந்தை உயிரிழந்திருப்பார்” என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை rjkhurki என்ற இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் பகிர்ந்துள்ளனர்.
வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இது எவ்விதத்திலும் நகைச்சுவைக்குரிய விஷயம் அல்ல, குழந்தையின் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இது மிகவும் பொறுப்பில்லாத செயல், யாரும் குழந்தையுடன் இப்படி செய்யக் கூடாது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தையின் பாதுகாப்பை புறக்கணித்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான கண்டனத்தை கிளப்பியுள்ளது.
