சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, உடைந்த கண்ணாடி துண்டுகளிலிருந்தே எப்படி புதிய கண்ணாடி ஜார்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை காட்டுகிறது. வீடியோவில், முதலில் உடைந்த கண்ணாடி துண்டுகள் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர், அதிக வெப்பத்தில் உருக்கி, இயந்திரங்கள் மூலம் அழகான ஜார்கள் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. அதன் பின் பாக்கிங் செய்து சந்தைக்கு அனுப்பப்படுவது வரை முழு செயல்முறை காண்பிக்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Smartest Workers (@smartest.worker)

“>

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் smartest.worker என்ற ஐடியில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 7 லட்சம் முறை பார்க்கப்பட்டதோடு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “உடைந்த கண்ணாடி துண்டுகளிலிருந்து இப்படிப்பட்ட அழகான ஜார்கள் உருவாக்குவது அற்புதம்” எனப் பாராட்டியுள்ளனர்.

சிலர், “இந்த வேலை மிகவும் கடினமானது, அதைச் செய்கிற தொழிலாளர்களுக்கு வணக்கம்” என்று கூறியிருந்தனர். இன்னும் சிலர், “இந்த முறையில் ஜார்கள் தயாரிப்பது முழுக்க பாதுகாப்பானதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். எப்படியாயினும், இந்த தொழிற்சாலை காட்சி தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.