தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பது ஒரு சடங்கு என்று கூறிய நிலையில் இந்த விவாத பொருளாக மாறியது. இதுதொடர்பாக நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றிய அவர் கூறியதாவது, விஜய் ஒரு மிகப்பெரிய திரைப்பட நடிகர் என்பதால் அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை காண்பதற்கு ஏராளமான மக்கள் வருவார்கள். போக்குவரத்து பிரச்சினைகளும் ஏற்படும்.

இதன் காரணமாக அவர் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மக்களை நேரில் சென்று சந்திப்பதை தவிர்ப்பது ஒருவகையில் நல்லது தான். ஆனால் அதே சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது ஒரு சடங்கு என்று விஜய் கூறக்கூடாது. விஜய் அப்படி சொன்னது ஒரு தவறான வார்த்தை. அந்த வார்த்தையை அவர் கூறியிருக்கக் கூடாது. ‌ அப்படி எனில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரையும், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரையும் விஜய் நேரில் சென்று சந்தித்தது சடங்கா.? மேலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அரசியல் கட்சி தலைவர்களின் கடமை என்றார்.