மதிமுக கட்சியில் துரைவைகோ  மற்றும் மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வைகோ முன்னிலையில் அவர்கள் இருவரும் கைக்குலுக்கி சமாதானம் செய்து கொண்டனர். மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மல்லை சத்யா எனக்கு பல காலமாக துணையாக இருக்கிறார். கட்சியிலிருந்து செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதிலும் எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படவில்லை. மல்லை சத்யா போன்ற கட்சியில் பட்டியலின பிரதிநிதித்துவம் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் மல்லை சத்யா பற்றி பல இடங்களில் பெருமையாக பேசிய நிலையில் சமீப காலமாக அவரது நடவடிக்கைகள் அப்படி இல்லை.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் தற்போது மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார். ஒருமுறை கடலில் விழுந்த போது மல்லை சத்யா காப்பாற்றினார். மற்ற மூன்று முறை கடலில் விழுந்த போது யார் காப்பாற்றினார் என்று கூறினார்.

இந்நிலையில் வைகோவின் விமர்சனங்கள் குறித்து தற்போது மல்லை சத்யா பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, என்னை வைகோ துரோகி பட்டம் கொடுத்த கட்சியிலிருந்து வெளியேற்ற நினைக்கிறார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தற்போது துரை வைகோவுக்காக என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்.

வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று அவர் கூறிவிட்டார். மேலும் இப்படி ஒரு வார்த்தையை கூற வைகோ துணிந்துள்ளது வாரிசு அரசியலுக்காக என்பதை தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.