பிலிங்கிட் நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து அதில் கைவரிசை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டிடத்தின் மேலிருந்து ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், அந்த ஊழியர் பிஸ்கட் பாக்கெட்டைத் திறந்துவிட்டு, மீண்டும் அதைச் சரியாக ஒட்டி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து, ஆன்லைன் டெலிவரி சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

குவிக் காமர்ஸ் எனப்படும் விரைவான விநியோக சேவைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன. டெலிவரி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை வசூலிக்கும் நிறுவனங்கள், பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gagan Kumar (@gagan.darkside)

“>

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இணையத்தில் இது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.