இந்திய முழுவதும் உள்ள 855 தேசிய சுங்கச்சாவடிகளில், தமிழ்நாட்டில் மட்டும் 65 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் இரு காலப்பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 1992ல் அமைக்கப்பட்ட சாலைகளில் ஏப்ரல் மாதமும், 2008ல் அமைக்கப்பட்ட சாலைகளில் செப்டம்பர் மாதமும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது, நள்ளிரவு முதல், தமிழகத்தில் உள்ள மறு 25 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வை மைய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என லாரி உரிமையாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. நாடு முழுவதும் இந்த உயர்வுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயர்வு விவரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் புதிய கட்டணங்கள் இவ்வாறு:

வாகன வகை பழைய கட்டணம் புதிய கட்டணம்

கார், ஜீப், வேன் (ஒரு வழி) ₹105 மாற்றமில்லை
பல முறை பயணம் ₹155 ₹160
மாத சந்தா ₹3,100 ₹3,170
இலகு வாகனம் (ஒரு வழி) ₹180 ₹185
பல முறை பயணம் ₹270 ₹275
மாத சந்தா ₹5,420 ₹5,545
டிரக், பேருந்து (ஒரு வழி) ₹360 ₹370
பல முறை பயணம் ₹540 ₹555
பல அச்சு வாகனம் (ஒரு வழி) ₹580 ₹595
பல முறை பயணம் ₹870 ₹890
மாத சந்தா ₹17,425 ₹17,820

இந்த உயர்வுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் புதிய கட்டணங்களால் பாதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.