கரூரில் 41 உயிர்கள் பலியான போது, அதற்குப் பொறுப்பேற்று மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல், வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் 72 நாட்கள் பனையூர் வீட்டிற்குள் பதுங்கியிருந்தது ஏன்? என அதிமுக தரப்பு விஜய்யைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதுமட்டுமின்றி, 15 நாட்கள் கட்சி அலுவலகத்தையே மூடி வைத்ததுதான் ஒரு தலைவனுக்கு அழகா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், இது வீரமல்ல, கோழைத்தனத்தின் அடையாளம் என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளனர். மக்களின் உயிரிழப்புக்குத் தீர்வும் சொல்லாமல், பயத்தில் ஒளிந்துகொண்ட ஒருவர் இன்று மேடையில் வீர வசனம் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

​இந்த நேரடித் தாக்குதல் தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் துயரத்தில் இருந்தபோது தலைவராகச் செயல்படாமல் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஒதுங்கியிருந்த அந்த 72 நாட்களைத் தற்போது அதிமுகவினர் அரசியலில் ஒரு முக்கிய ஆயுதமாக மாற்றியுள்ளனர். “வீரத்திற்கும் கோழைத்தனத்திற்கும்” இடையிலான வித்தியாசத்தை இந்தச் சம்பவமே உணர்த்துகிறது என்று அவர்கள் கூறி வருவது அரசியல் களத்தில் அடுத்தகட்ட விவாதத்தைக் கிளப்பியுள்ளது.