ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைச் ‘சனாதனி’ என வரையறுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனத்தை  தெரிவித்துள்ளார்.

எம்மதத்தையும் சாராமல் பொதுமறையாக விளங்கும் திருவள்ளுவரை, ஆளுநர் மாளிகை விழாவில் காவி உடை தரித்தவராக உருவகப்படுத்திப் பேனர் வைத்திருப்பது அவமதிக்கும் செயல் என சண்முகம் சாடியுள்ளார்.

“வள்ளுவரைச் சனாதனப் பெட்டிக்குள் அடைக்க நினைக்கும் ஆளுநரின் இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி அரசியல் விவாதப் புயலைக் கிளப்பி  வருகிறது.