இன்றைய காலக்கட்டத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாகப் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுவது உண்மைதான். ஆனால், அதற்காகத் தனது மனைவியையே வாடகைக்கு விடுவதாகக் கணவன் ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவியின் செலவுகளைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும், அதனால் அவரை வாடகைக்கு விடுவதாகவும் அந்த நபர் அந்த வீடியோவில் வெளிப்படையாகக் கூறியுள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புனிதமான வாக்குறுதிகளைக் காலில் மிதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயல், பெண்களை ஒரு வெறும் பொருளாகப் பார்க்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

View this post on Instagram

A post shared by @myindianworld

​இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் அந்த நபரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இவர் ஒரு கணவன் அல்ல, தரகர் போலச் செயல்படுகிறார்” என்றும், “இப்படிப்பட்ட நபரை விட்டு அந்தப் பெண் உடனடியாகப் பிரிந்து செல்ல வேண்டும்” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘வைப் ஸ்வாப்பிங்’ போன்ற கலாச்சாரச் சீரழிவுகள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு கணவனே தனது மனைவியை வாடகைக்கு விடுவதாகக் கூறுவது பண்பாட்டுச் சிதைவின் உச்சம் என மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.