புத்தாண்டை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், வரும் 2026-ம் ஆண்டு தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்பதை மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழக அரசியலில் நேர்மையான நம்பிக்கை ஒளியாகவும், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் நாமே மாறுவோம்” என்று தனது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.
புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.வளமான,… pic.twitter.com/Ginw8JljxM
— TVK Vijay (@TVKVijayHQ) December 31, 2025
வெற்றி நிச்சயம் என்ற முனைப்புடன், “வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலை மிகத் தீவிரமாக எதிர்கொள்ளத் தயாராகி வரும் விஜய், இந்த 2026-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்பதைத் தனது வாழ்த்துச் செய்தியின் மூலம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த அதிரடியான புத்தாண்டுப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
