மத்தியப் பிரதேசம், ரீவா மாவட்டம், சாக்கட்காட் பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது ஒரு அதிர்ச்சித் தகவலில் சிக்கி தவிக்கின்றனர். அரசு ஆவணங்களில் “அம்ருத் ஸரோவர்” என்ற பெயரில் ₹24.94 லட்சம் செலவில் 2023 ஆகஸ்ட் 9-ம் தேதி குளம் கட்டப்பட்டதாக பதிவாகியிருந்தது. ஆனால் அந்தக் குளம் உள்ள இடத்தை நேரில் சென்று பார்த்தால், குளத்தில் எந்தவொரு கட்டட சாயலும் காணப்படவில்லை. இந்த விஷயம் RTI ஆர்வலர் லலித் மிஸ்ரா மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
அரசு ஆவணங்களில், கட்டிட வேலை கத்தோலி கிராமத்தின் நில எண் 117ல் நடந்ததாக உள்ளது. ஆனால், நேரில் சென்று பார்த்தபோது, அங்கே எந்தவொரு குளமும் இல்லை. பதிலுக்கு, அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைக்கு சின்ன சிறிய அணை அமைத்து, தனியாருக்குச் சொந்தமான நில எண் 122ல் தண்ணீரைத் தேக்கி, அதை “குளமாக” காட்டி ₹24.94 லட்சத்தை ஊழல் கூறப்படுகிறது. இது முற்றிலும் போலி செயற்பாடு என RTI தகவலில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் குறித்து கிராம மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது, அதிர்ச்சியடைந்த மக்கள், குளத்தை கண்டுபிடிக்க உதவுவோருக்கு வெகுமதி அளிப்பதாக அறிவிப்பு செய்துள்ளனர். ரீவா மாவட்ட கலெக்டர், இந்த விவகாரத்தில் சுயவிவரம் கேட்டும், விசாரணை ஆணை வழங்கியுள்ளார். இது அரசுத் திட்டங்கள் எவ்வாறு நடைமுறையில் இல்லாமல் நிதி முறைகேடாக மாறுகிறது என்பதற்கான இன்னொரு சாட்சி என பேசப்படுகிறது.
