இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் விழா மிகுந்த ஆனந்தத்துடனும் பக்தியுடனும் நடைபெற்றது. ஆனால், கடைசி  நேரத்தில் சிலைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

 கடந்த ஆண்டு நடந்த நிகழ்வை ஒரு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். அப்போது நீரில் கரைக்கும்  சடங்கு முறையாக நடைபெறாமல் சிலைகள் கீழ்மட்ட வடிகால்களில் வீசப்பட்ட காட்சிகள் அவரது மனதை உள்ளுக்குள் சீர்குலைத்துவிட்டதாக கூறினார். இது அவரை மட்டுமல்லாது அதனை பார்த்த பக்தர்களையும் வேதனையில் ஆழ்த்தியது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இதையே உறுதிப்படுத்துகிறது. அந்தக் காணொளியில், முழங்கால் அளவு கழிவுகளுடன் கலந்த கால்வாயில் கைவிடப்பட்ட சிலைகளை ஒருவர் கண்ணீருடன் தூக்கி வெளியே எடுத்து வருகிறார். அதில் அவர் கேட்கும் கேள்வி, “மனிதர்களையும் இப்படித்தான் நடத்துவீர்களா?” என்பதுதான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bappa Magic Official (@bappa_magic)

“>

இதுபோன்ற செயல்கள், விநாயகர் விழாவின் புனிதத்தையும், சுற்றுச்சூழலையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. மேலும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் நச்சுப்படலம் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக அமைவதாகவும், இது விழாவின் அர்த்தத்தை இழக்கச் செய்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Kumar (@help_by__god)

“>

தெய்வ பக்தி என்பது ஒழுங்கு மற்றும் மரியாதையுடன் இணைந்திருக்க வேண்டியது. நீரில் கொண்டு சேர்க்கும்  போது பகவானின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது நம்முடைய கடமை. அரசு ஏற்படுத்தும்  நீர்தொட்டிகளைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை மட்டும் வைக்க வேண்டும்.

தெய்வங்களை கொண்டாடும் மனநிலையோடு, அவற்றை மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் அனுப்பி வைப்பதே உண்மையான பக்தியின் அடையாளம் என்பதை இந்த சம்பவம் நமக்கு வலியுறுத்துகிறது.